Wednesday, December 9, 2009

அனுபவங்கள்

மாணிக்கம் மாணிக்கம் என்று கூப்பிட்டாள் மரகதம், என்னம்மா நாளைக்கு உங்க அப்பாவிற்கு ஹார்ட் ஆப்பரேசன் அதற்கு தேவையான ஏற்பாடுகளை எல்லாம் சென்சிட்டியப்பா? மாணிக்கம் அதிகமாக படிக்கவில்லை என்றாலும் திறமைசாலி. அவனது அப்பா மளிகை கடை ஒன்றை நடத்திவந்தார். மாணிக்கத்திற்கு என்று தனியாக கடை ஏதும் வைத்து தரவில்லை என்றாலும் அவனது அப்பாவிற்கு பிறகு அந்த கடைக்கு உரிமையாளன் அவனே. மாணிக்கத்திற்கு ஒரு தங்கையும் உண்டு அவளது கல்யாணத்தை அங்கே இங்கே கடனை வாங்கி ஒரு வழியாக திருமணத்தை முடித்து வைத்திருந்தான். அதற்குள் அவனது அப்பாவிற்கு உடல் நிலை சரி இல்லாமல் போய் அவருக்கு ஹார்ட் ஆப்பரேசன் செய்தே ஆகவேண்டும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.


தெரிந்தவர்கள் அனைவரிடமும் இப்போது தான் கடன் வாங்கி இருந்தான். பாவம் பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தான் அவனது பாலிய சிநேகிதனான முருகன் அவனது நினைவிற்கு வந்தான். அவன் அவனது தங்கையின் திருமணத்திற்கு வந்த போது உனக்கு எந்த உதவிவேண்டுமானாலும் தயங்காமல் தன்னிடம் வந்து கேட்குமாறு கூறியிருந்தான். அது மாணிக்கத்தின் நினைவிற்கு வந்தது. ஆனால் என்ன செய்வது மாணிக்கம் இருப்பது கிராமத்தில் முருகன் இருப்பதோ டவுனில். எப்படியும் போய் வர ஒரு நாள் ஆகிவிடும். என்ன செய்வது பணம் வேண்டுமே. தனது அம்மாவான மரகதத்திடம் விஷயத்தை கூறி விட்டு டவுனுக்கு சென்று முருகனை சந்தித்தான்.


தனக்கு பணம் தேவைப்படுவதையும் தனது தந்தைக்கு ஆப்பரேசன் செய்தியையும் முருகனிடம் தெரிவித்தான். அவனும் மாணிக்கம் கேட்ட தொகையான ஒரு லட்ச ரூபாயை கடனாக கொடுத்தான் ஆனால் சீக்கிரம் திருப்பி தந்துவிடவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தான். அந்த தொகையை வாங்கிக்கொண்டு காலையில் தான் வீட்டிற்கு வந்து அமர்திருந்தான் மாணிக்கம். என்னப்பா உன்னுடைய சிநேகிதனான முருகன் பணம் கொடுத்தானா என்று மரகதம் கேட்டாள். கொடுத்தான் அம்மா. அந்த பணத்தை கொண்டுபோய் காலையிலேயே ஆஸ்பத்திரியில் கட்டிவிட்டு ஆபரேஷனுக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டு தான் அம்மா வந்தேன் என்று கூறினான் மாணிக்கம். ஒரு வழியாக அப்பாவிற்கு ஹார்ட் ஆப்பரேசன் நல்ல படியாக முடிந்தது. திரும்பிப்பார்ப்பதற்க்குள் நான்கு மாதங்கள் உருண்டோடின. முருகனுக்கு பணத்தை புரட்டி எப்படியாவது கொடுக்க வேண்டும்.என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான் மாணிக்கம்.


மளிகை கடையில் முன் மாதிரி ஓஹோ என்று வியாபாரம் நடப்பதில்லை இருந்தாலும் அன்னன்னிக்கு வரும் வருமானத்தை வைத்து கடையை நடத்தி வந்தான் மாணிக்கம். வெகு நாட்கள் ஆகியும் மாணிக்கத்திடம் இருந்து எந்த தகவலும் வராததால் முருகனே மாணிக்கத்தின் வீட்டிற்கு வந்து விட்டான். என்ன மாணிக்கம் பணத்திற்கு என்ன பண்ணபோறே என்றான் முருகன். மாணிக்கத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் நாள் பொறுத்துக்கோ எப்படியாவது ரெடி பண்ணி கொடுத்து விடுகிறேன் என்றான். பணம் கொடுத்தே ஆறு மாதத்திற்கு மேல் ஆகிறது இதற்கு மேல் நீ எங்கிருந்து ரெடி பண்ணுவே. எனக்கு அவசரமா பணம் தேவைபடுகிறது. நீ ஒன்னு பண்ணு ஏன் இந்த மளிகை கடையை வைத்துக்கொண்டு இங்கு இவ்வளவு கஷ்டபடறே. பேசாம இத வித்துட்டு என்னோடு டவுனுக்கு வந்திடு. அங்கே உனக்கு தெரிந்த தொழில் செய்து பிழைத்துக்கொள் என்று கூறினான்.


மாணிக்கம் அவனது பேச்சில் உள்ள சூட்சமத்தை அறியாதவனாய் அந்த மளிகை கடையை அவனுக்கே விற்று விட்டு முருகனிடம் கடனை திருப்பி கொடுத்து விட்டான். தனது பணம் கைக்கு வந்தவுடன் ஊருக்கு புறப்பட்டான் முருகன். மாணிக்கம் தனது அம்மாவிடம் தானும் ஊருக்கு புறப்படுவதாக கூறினான். மரகதம் எவ்வளவோ கூறியும் மாணிக்கம் கேட்கவே இல்லை. முருகனுடன் டவுனுக்கு புறப்பட்டான். மாணிக்கத்திற்கு மளிகை கடையை தவிர வேறு எதுவும் தெரியாது. அங்கு என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் சின்னதாய் ஒரு கடையை வைத்தான். ஆரம்பத்தில் நிறைய வியாபாரம் நடந்தது. ஆனால் போக போக மாணிக்கம் தடுமாற ஆரம்பித்தான். அனைவரும் நான் முருகனது சொந்தக்காரன், முருகனுக்கு வேண்டியவர்கள் என்று கூறி பொருட்களை கடனாகவும், சிலர் காசு கொடுக்காமலும் பெற்றுச் சென்றனர்.


முருகனது வீட்டாரும் அனைத்து பொருட்களையும் இங்கேயே வாங்கிச்சென்றனர். தனக்கு பணம் கொடுத்து உதவியவனாச்சே அதனால் காசு வாங்க மனம் வரவில்லை மாணிக்கத்திற்கு. இப்படியே சில நாட்கள் உருண்டோடின. கடையில் ஒவ்வொரு பொருட்களாக தீர ஆரம்பித்தது, ஆனால் கல்லாவில் பணம் சேரவில்லை . மாணிக்கம் முருகனிடம் சென்று பணம் கேட்டான் அவனும் கொடுத்தான். ஆனால் எவ்வளவு நாளைக்குதான் இப்படி பணம் வாங்கி வாங்கி பொழப்பு நடத்துவது. ஆரம்பத்தில் கொஞ்சம் பணமாவது தன் தாய்க்கு அனுப்பிவைத்த மாணிக்கம் இப்போது அதை அனுப்புவதற்கு மிகவும் கஷ்டப்பட்டான். கடை மிகவும் கடனில் ஓட ஆரம்பித்தது. அவன் கிராமத்தில் இருந்தால் அன்றன்று வரும் வருமானத்தை கொண்டு எப்படியோ பிழைத்துக்கொண்டு வந்தான். இங்கு அதுவும் போய்விட்டது. சிறிது நாட்களில் கடைக்கு வாடகை கொடுக்காததால் கடையை காலி செய்து தர சொன்னார்கள். முருகனிடம் இதை தெரிவித்த போது இதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. என்னிடம் தற்போது பணம் ஏதும் இல்லை என்று கூறி விட்டான்.


மாணிக்கத்திற்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. அப்போது தான் தனது தாய் மரகதம் கூறியதை உணர்ந்தான். கூழோ கஞ்சியோ இங்கேயே எதோ ஒரு பெட்டிக்கடை வைத்து பிழைத்துக்கொள்ளலாம் என்று கூறினாள். மாணிக்கம் கடையில் இருந்த பொருட்களை எல்லாம் விற்று விட்டு முருகனிடம் இருந்து வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு மற்ற கடன் களையும் சரி கட்டி விட்டு ஊருக்கு புறப்படுவதாக கூறினான். முருகன் இங்கேயே சிறிது நாள் இருந்து வேறு வேலை எதாவது ஏற்பாடு செய்து தருவதாக கூறினான். அதற்கு மாணிக்கம் இல்லை எனது கிராமதிற்கே சென்று பிழைத்துக்கொள்வதாக கூறிவிட்டு தனது தாய்தந்தையரிடமே வந்து விட்டான். மரகதம் வெகு நாள் கழித்து மாணிக்கத்தை பார்ப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். மாணிக்கம் நீ அனுப்பிய காசுகளை நான் செலவு செய்தது போக மீதியை பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன். இந்தா அதை வைத்து ஒரு பெட்டிக்கடை வைத்து அதில் வரும் வருமானத்தை கொண்டு பிழைத்து கொள்ளலாம் என்று கூறினாள் மரகதம். தனது தாயின் பரிவை எண்ணி கண்களில் நீர் மல்க தனது தாயை அணைத்துக்கொண்டான் மாணிக்கம்.

Thursday, November 19, 2009

கவிதைகள்...

முத்தம்
காதலர்களுக்கு கிடைத்த
ஒரு காதல் சின்னம்

வங்கியில் போடா முடியாத
Fixed Deposit

முரண்பாடு
கடவுளை கணுவதாகக் கூறி
தனது தாய் தந்தையரை
முதியோர் இல்லத்தில் விட்டு
விட்டுச் சென்றான்.

அதிஷ்டம்
வாழ்க்கையில் நம்ப
முடியாமல் நடக்கும்
சில சம்பவங்களுக்கு
மனிதர்கள் மூலம்
கூறப்படும் வார்த்தை

ஒற்றுமை
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாமல்
போவது வெங்காயமும், காதலும்
கடைசியில் அழுவான்
உரித்தவனும்! காதலித்தவனும்!

பூ
ஒரு சிறிய மொட்டாக இருந்து
பிறகு மனம் வீசும் மலராக விரிந்து
எப்படி என் மனத்தை கவர்ந்தாய்.

Sunday, November 8, 2009

ராஜத்தின் மனம்

மாலை 6 மணி அளவில் கலா தனது அலுவலகம் முடிந்து வீடு வந்து கொண்டிருந்தாள். அன்றைய தினம் நடந்தது அவளது நினைவில் அசை போட்டுகொண்டிருந்தது ஆமாம் அவளை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்து இருந்தார்கள். மாலை 6 மணிக்கு வருவதை அவளது அம்மா அவளிடம் 5 மணி அளவில் தான் தெரிவித்தாள். வேணு பூ வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தான். வேணு கலாவின் தம்பி B.Com இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தான்.

கலாவிற்கு ஒரு தங்கையும் உண்டு அவள் B.Sc முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறாள். அப்பா சுந்தரம் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுகிறார். அம்மா மீனாட்சி அந்தக்கால puc படித்தவள் இருந்தாலும் வீட்டுவேலைகளை பார்க்கவே நேரம் இல்லாததால் வேலைக்கு எங்கும் செல்லவில்லை. கலா MA வரை படித்துவிட்டு ஒரு தனியார் அலுவலகத்தில் ஸ்டெனோவாக வேலை பார்த்து வந்தாள். தினமும் அவள் வேலை முடித்து வருவதற்கு நேரம் ஆகிவிடும். அன்றும் அப்படிதான் அலுவலகம் விட்டு வருவதற்கு நேரம் ஆகி விட்டது.

மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே பெண்ணை புகைப்படம் முலம் பார்த்து பிடித்து விட்டதால் பெண்ணை நேரில் பார்க்க காத்திருந்தனர். அவள் விட்டிற்கு வந்ததும் கலா சீக்கிரம் புடவை மாற்றிக்கொண்டு வா. அவர்கள் வந்து ஒரு மணி நேரமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றாள் அம்மா மீனாட்சி.

கலாவினது உறவினர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். கலா புடவை மாற்றிக்கொண்டு வந்து அனைவருக்கும் காப்பி கொடுத்தாள். போட்டோவிள் பார்த்ததை விட நேரில் மிகவும் ஆழகாக இருந்தாள் கலா. வாசன் தனது அம்மாவிடம் ஏதோ முணுமுணுத்தான். என்ன வென்று விசாரித்த போது பெண்ணிடம் தனியாக பேசவேண்டும் என்பதை தெரிவித்தனர். இதை கலாவிடம் தெரிவித்தவுடன் கலா மெளனமாக இருந்தாள். இருந்தாலும் மாப்பிள்ளை வீட்டார் கேட்டுவிட்டனர் என்பதற்காக அவளை பேச அனுமதித்தனர்.

வாசன் கலாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பிறகு அனைவரும் சென்று விட்டனர். மற்றவிசயங்களை பெரியவர்கள் அனைவரும் கூடி பேசி முடித்தனர். ஒரு வாரம் கழித்து திடீரென்று ஒரு பூகம்பம் வெடித்தது.

ராஜம் வாசனது அம்மா கொஞ்சம் மிடுக்கானவள். வரதட்சணை பணம் கொஞ்சம் அதிகமாக எதிர் பார்த்தாள். ஏற்கனவே இவர்கள் கேட்ட வரதட்சணையை செய்வதற்கு பெண்வீட்டார் ஒத்துகொண்டனர். அதை செய்வதற்கே அவர்களால் முடியாத சூழ்நிலை. இருப்பினும் திடீர் என்று வாசன் தாயார் மேற்க்கொண்டு 5 சவரன் நகை கேட்க அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனை மாப்பிள்ளை வீட்டாரிடம் எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. ராஜத்திற்கு முதலிருந்தே இந்த சம்மந்தத்தில் துளி கூட நாட்டம் இல்லை அதனால் தானோ என்னவோ பெண்வீடாரினால் அவ்வளவு நகை போட முடியாது என்று தெரிந்து கொண்டே அவ்வாறாக அவர்களிடம் வரதட்சணை அதிகமாக கேட்டாள்.

வாசனும் அவனது தந்தை லோகநாதனும் எவ்வளவோ எடுத்து கூறிப் பார்த்தனர். அதற்கெல்லாம் மசிந்தவளாக தெரியவில்லை ராஜம். ஆனால் ராஜம் இவ்வாறாக நடந்துகொள்வதற்கு ஒரு முலகாரணமும் உண்டு என்பது அவளுக்கும் விஜயனுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு விஷயமாகும். வாசன் வீட்டாருடைய குடும்ப Doctor தான் விஜயன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வாசனுக்கு தீராத வியாதி மூளையில் கட்டி (Brain Tumor) என்று அழைக்கப்படும் கொடுமையான வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறான் வாசன் என்பது தான் அந்த உண்மை. ஒரு சிறு விபத்தில் வாசனுக்கு தலையில் அடி பட்டு காயம் ஏற்ப்பட்ட போது தான் இந்த வியாதியால் அவன் பாதிப்படைந்தது பற்றி தெரியவந்தது.

இதனை குணமாக்குவதற்கு வாசனது தாயாரும் எவ்வளவோ முயற்சி எடுத்துப்பர்த்தும் பயன் இல்லை. அவளும் வேண்டாத தெய்வம் இல்லை. இந்த நிகழ்வு வாசனது தந்தைக்கு கூட தெரியாது. ஆனால் இந்த நிகழ்வு தெரியாமலேயே வாசனும் அவனது தந்தை லோகநாதனும் ராஜத்திடம் மிகவும் கடிந்துக்கொண்டனர்.

ஒரு மாதத்திற்கு பின்னால் லோகநாதனுடைய அக்கா பெண்ணான சாந்தியை மணம்முடித்து வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ராஜத்திடம் கூறாமலேயே லோகநாதனும் வாசனும் இரண்டு தெரு தள்ளி உள்ள அக்கா வீட்டிற்க்கு செல்வதாக பேசிக்கொண்டனர். சமையல் அறையில் ஒரு ஓரமாக நின்று இதை கேட்டுக்கொண்டிருந்த ராஜம் இந்த சம்மந்தத்தை எப்படியாவது தட்டிக்கழிக்க வேண்டும் என்று தனது மனதிற்குள் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாமல் லோகநாதனும் வாசனும் மிகவும் ஆனந்தத்தில் இருந்தனர். ஆனால் இது ராஜதிற்கு மட்டும் தெரிந்த உண்மையாக இருந்தது.